பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
இன்று (திங்கட்கிழமை) காலை 7.00 மணி தொடக்கம் பிற்பகல் 12.00 மணிவரை இந்த பணிபுறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளவுள்ளனர்.
நாடளாவியரீதியில் தாதியர் சங்கத்தினர் புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளார்கள். 44 தொழில் சங்கங்களும் இணைந்து இந்த தொழில் சங்க புறக்கணிப்பில் ஈடுபட்டுகின்றனர்.
6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்ளப்படுகிறது. கொரோனா காலத்தில் தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல், இந்த காலத்தில் மேலதிக நேர விசேட கொடுப்பனவினை கட்டுப்பாடு இன்றி வழங்குதல், வடமாகாண சுகாதா ஊழியர்களின் வெற்றிடங்களை நிரப்புதல், போன்ற கோரிக்கையினை முன்வைத்து பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு பெற வந்தவர்களுக்கு இடையூறு எதுவும் இன்றியே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டனர்.