ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்கள் நியாயத்தை பெற்றுக் கொடுக்கும் வழிமுறை இன்று இல்லாமல் போயுள்ளது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
அரசியல் அழுத்தம், அரசியல் இலாபம் உள்ளிட்ட காரணிகளினால் தாக்குதலின் உண்மையை மறைக்கும் நடவடிக்கைகள் மாத்திரம் தற்போது இடம்பெறுகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொதுப் பிரச்சினை தொடர்பாகவும் அரசாங்கம் அக்கறைகொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.
70 வருடகாலமாக ஊழல் நிறைந்த ஆட்சிமுறைமையே தொடர்ந்தது என்றும் அந்தநிலைமை இன்றும் நீடிப்பதாகவும் இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சுட்டிக்காட்டினார்.
குறுகிய நோக்கத்திற்காக மனசாட்சிக்கு விரோதமாக செயற்படகூடாது என குறிப்பிட்ட கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மக்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்போம் என்றும் குறிப்பிட்டார்.