கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் நேற்றைய தினம் ( செவ்வாய்க்கிழமை) மாலை, மன்னார் மடு கோவில் மோட்டை விவசாயிகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோயில் மோட்டை விவசாயிகளால் நேற்றைய தினம் மாலை கொட்டும் மழைக்கு மத்தியில் சுமார் ஒரு மணி நேரம் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தை மேற்கொண்டனர்.
அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர் கொரோனா என்று ஓடி ஒளியாமல் ஏழை விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு கொடு,
ஆளுநரிடம் காணி பெறுவதற்கான அனுமதி கோராமல், காணி தங்களுடையது என கூறும் அராஜகத்தை மத குருக்கள் நிறுத்துங்கள், போன்ற பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோவில் மோட்டை விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்
தொடர்ந்து போராட்ட களத்திற்கு சென்ற ஜனாதிபதியின் செயலாளரிடம் சட்டத்தின் பால் வடக்கு மாகாணம் எடுத்த முடிவை நடைமுறைப்படுத்த மத்திய அரசு இடமளிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளடங்கலாக எழுதப்பட்டிருந்த மகஜர் ஒன்றை ஜனாதிபதியின் செயலாளரிடம் விவசாயிகள் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.