பிரித்தானியாவில் உள்ள ஊழியர்கள் அலுவலகம் சென்று வேலை செய்ய வேண்டும் என அந்நாட்டுப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வலியுறுத்தியுள்ளார்.
உற்பத்தியைப் பெருக்கவும், இளம் ஊழியர்கள் வேலைத் திறன்களைக் கற்றுக்கொள்ளவும் அது முக்கியம் என அவர் கூறினார்.
பிரித்தானியாவில் நாள்தோறும் புதிதாக பலருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்படுகிறது.
என்றாலும், கொரோனா தொற்று பரவல் பிரித்தானியாவில் பெரிய அச்சுறுத்தலாக இல்லை என பொரிஸ் ஜோன்சன் கூறினார்.
ஊழியர்களின் போட்டித்தன்மையை உறுதிசெய்ய நேரடியான தகவல் பரிமாற்றம் முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆனாலும், தமது அலுவலக ஊழியர்கள், முழுமையாகப் பணிக்குத் திரும்பவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.