அரசாங்கத்துக்கு முறையான வேலைத்திட்டம் இல்லாத காரணத்தினாலேயே நாடு பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
விவசாயிகளுக்கான இரசாயண உரம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தடை காரணமாக விவசாய நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ள மக்களுக்கு எந்த தீர்வையும் அரசாங்கம் இதுவரை முன்வைக்கவில்லை என வஜிர அபேவர்த்தன குற்றம் சாட்டினார்.
நாட்டை கொண்டு நடத்துவதற்கு அரசாங்கத்திடம் தூரநோக்கு சிந்தனையோ முறையான வேலைத்திட்டமோ இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே அடுத்த வருட நடுப்பகுதியில் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாமல் மக்கள் அவதிப்படும் நிலை ஏற்படும் என்றும் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன குறிப்பிட்டார்.