வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கத்திடம் முறையான வேவலைத்திட்டமும் உறுதியான கொள்கையும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக விரக்தியடைந்திருக்கும் மக்கள் இந்த அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு நீண்டகாலம் செல்லாது என அக்கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
எனவே முறையான திட்டங்கள் நாட்டை கட்டியெழுப்ப மக்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் கைகோர்த்துக்கொள்ள முன்வரவேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
சிறிகொத்தாவில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சுகாதாரம், விவசாயம், கல்வி என அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்திருக்கின்றன என்றும் இதனை மீட்டெடுக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அகிலவிராஜ் காரியவசம் குற்றம் சாட்டினார்.