மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் செயற்படும் உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தேரல்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
அவ்வாறு நடந்துகொள்பவர்கள் தொடர்பாக அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளின் செயலாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு தேரல்தல்கள் ஆணைக்குழு மாகாண ஆளுநர்களுக்கு அறிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கிடையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்ற கூட்டத்தின்போதே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் உறுப்பினர்களின் நடவடிக்கை இருந்தால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுப்பது ஆளுநர்களின் கடமை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் 2021 ஆம் ஆண்டுக்கான வாக்களார் பட்டியலில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரையும் இணைத்துக்கொள்ள விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.