மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையை மூடி பொதுசுகாதார பரிசோதகர்கள் சீல் வைத்துள்ளனர்.
குறித்த சிற்றுண்டிச்சாலையில் நோயாளி ஒருவர் வாங்கிய சாப்பாட்டில் பல்லி காணப்பட்டதையடுத்து, அவர் உடனடியாக வைத்தியசாலை பணிப்பாளருக்கு முறையிட்டுள்ளார்.
இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த சிற்றுண்டிச்சாலையை பரிசோதனை செய்த பின்னர் சிற்றுண்டிச்சாலையை நடாத்தி வருபவருக்கு எதிராக மட்டக்களப்பு நீதிமன்றில் இன்று (திங்கட்கிழமை) உணவு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்குதல் செய்தனர்.
இதனையடுத்து, 10 ஆயிரம் ரூபாய் அபதாரமாக செலுத்துமாறும் சிற்றுண்டிச்சாலையை மூடி சீல்வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் இன்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டார்.
இதனையடுத்து பொதுசுகாதார பரிசோதகர் எஸ்.சந்திரசிறி தலைமையிலான பொதுசுகாதார உத்தியோகத்தர்கள் இன்று உடனடியாக சிற்றுண்டிச்சாலையை மூடி சீல்வைத்தனர்.