இந்த வார வரவு செலவு திட்டத்தில், இங்கிலாந்து தேசிய சுகாதார சேவைக்கு 5.9 பில்லியன் பவுண்டுகள் கூடுதலாக அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
தொற்றுநோயால் மோசமடைந்துள்ள சோதனைகள் மற்றும் ஸ்கேன்களுக்காக காத்திருக்கும் நபர்களின் பதிவு நிலுவையை நீக்க இந்த பணம் பயன்படுத்தப்படும்.
மேலும், உபகரணங்கள் வாங்கவும் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை விரிவு படுத்தவும் பயன்படுத்தப்படவுள்ளது.
இந்த பணத் தொகை ‘மாற்றியக்கப்படும் தொகை’ என திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக் விபரித்துள்ளார். இதுதொடர்பான மேலதிக விபரங்கள் எதிர்வரும் புதன்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.
இந்த அறிவிப்பை சுகாதார அமைப்புகள் வரவேற்றுள்ள அதேவேளை ஊழியர்கள் பற்றாக்குறையை சரிசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
இங்கிலாந்தில் தேசிய சுகாதார சேவை மருத்துவமனை சிகிச்சைக்காக ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காத்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருக்கிறார்கள்.