நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்த விடயம் குறித்து தன்னிடம் அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன், பொய் கூறியுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
12 நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க 37 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை அவுஸ்ரேலியா இரத்து செய்த காரணத்தால் பிரான்ஸ் கோபமடைந்துள்ளது.
அதற்கு பதிலாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துடன் ஒரு புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு அவுஸ்ரேலியா பேச்சுவார்த்தை நடத்தயது.
கடந்த செப்டம்பரில் இரு நாடுகளுக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து வேறுபாடு காணப்படும் நிலையில் G20 உச்சிமாநாட்டில் இரு தலைவர்களும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அவுஸ்ரேலியா மீது மிகுந்த மரியாதை இருப்பதாகவும் இந்த நம்பிக்கையை உறுதி செய்ய உண்மையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்த இம்மானுவேல் மக்ரோன் கூறினார்.