‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற செயலணியின் வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக குறித்த பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சட்டரீதியாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றத்தில் கலந்துரையாடப்படாமல் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியினால், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற நோக்கத்தை ஆராய்ந்து நடைமுறைப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் இல்லாதுபோயுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டவரின் கடந்த காலங்களை கருத்திற்கொள்ளாமல், தமிழ், ஹிந்து, கத்தோலிக்க, கிறிஸ்தவ மற்றும் சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் வழங்காமை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதால் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
எனவே, இந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை அந்த அறிக்கையூடாக கோரிக்கை விடுத்துள்ளது.