பங்காளிகளாக இருந்தாலும் அரசாங்கத்தின் அனைத்து தீர்மானங்களுக்கும் ஆதரவளிக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நாட்டின் தற்போதை அரசியல் நிலைமையில் எந்தவொரு கட்சிக்கும் தனித்து செயற்பட முடியாது என்பதனால் சுதந்திரக் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன்மூலம் நாட்டை நேசிக்கின்ற, மக்களின் துயரங்களை புரிந்துகொள்ளக்கூடிய, ஊழல் மோசடி இல்லாத குழுவொன்றுடன் முன்னோக்கி செல்ல எதிர்பார்த்துள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மக்கள் எதிர்காெண்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு அரசாங்கம் முறையான தீர்மானங்களை மேற்கொண்டு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும் சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட உரம் தொடர்பாக தன்னிச்சையாக செயற்படாமல் நிபுணர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலாேசனைகளுக்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.