குரேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக ஐந்து இலட்சத்து ஆயிரத்து 327பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 62ஆவது நாடாக விளங்கும் குரேஷியாவில் இதுவரை 9,500பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், நான்காயிரத்து 159பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 50பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 32ஆயிரம் பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக, நான்கு இலட்சத்து 59ஆயிரத்து 827பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.