பிரித்தானிய மன்னர் சார்ல்ஸின் இளைய சகோதரரான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரின் (Andrew Mountbatten-Windsor ) சொத்துக்களைச் சோதனையிடப் பெறப்பட்ட நீதிமன்ற உத்தரவுகள் சட்டப்படி செல்லுபடியாகாது எனப் பொலிஸார் ஒப்புக்கொண்டுள்ளனர்
எனினும், மறைந்த குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான ( Jeffrey Epstein) தொடர்பு மற்றும் அரசுப் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேடுதலின்போது கைப்பற்றப்பட்ட பொருட்களைத் தொடர்ந்து தம்வசம் வைத்திருப்பது தொடர்பிலும் சட்ட நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை, Andrew அனைத்து குற்றச்சாட்டுகளையும் முற்றாக மறுத்துள்ள நிலையில், அவரது இந்தச் சட்டப் போராட்டத்திற்கு மன்னரின் தனிப்பட்ட நிதியைப் பயன்படுத்த முடியாது எனப் பக்கிங்ஹாம் (Buckingham ) அரண்மனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

















