உடன் அமுலுக்கு வரும் வகையில் பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் (DIGs) ஆறு பேருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றும் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டு, பொலிஸ்மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரியவினால் இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி, களுத்துறை மாவட்டத்திற்குப் பொறுப்பான பெண் பிரதிப் பொலிஸ்மா அதிபர், கேகாலை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கேகாலை மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளையில், யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய பிரதிப் பொலிஸ்மா அதிபர், களுத்துறை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் (CCID) பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர், பொலிஸ் நலன்புரிப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் நலன்புரிப் பிரிவில் பணியாற்றிய பிரதிப் பொலிஸ்மா அதிபர், மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.












