அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான USS Abraham Lincoln வானூர்தி தாங்கிக் கப்பல், 321 நாட்கள் நீண்ட கடற்படைப் பணியை நிறைவு செய்து சான் டியாகோ துறைமுகத்திற்குத் திரும்பியுள்ளது.
வியட்நாம் போருக்குப் பின்னர் அமெரிக்க வானூர்தி தாங்கிக் கப்பல் ஒன்று மேற்கொண்ட மிக நீண்டகாலப் பணிகளில் ஒன்றாக இந்தப் பயணம் பதிவாகியுள்ளது.
மத்திய கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட ‘Operation Epic Fury’ நடவடிக்கை உள்ளிட்ட கடல்சார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த இந்தக் கப்பலின் பணியாளர்கள், இடையில் எந்தவொரு துறைமுகத்திலும் நிறுத்தமின்றி தொடர்ந்து 265 நாட்கள் கடலில் பயணித்துள்ளனர்.
கப்பல் துறைமுகத்தை வந்தடைந்தபோது, தங்களின் குடும்பத்தினரை மீண்டும் சந்தித்த கடற்படையினருக்கு உணர்ச்சிபூர்வமான வரவேற்பு அளிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கக் கொடிகளை அசைத்தவாறு பெருமளவிலான மக்கள் அவர்களை வரவேற்கத் திரண்டிருந்தனர்.
இந்தத் திரும்புகை, கப்பலில் பணியாற்றிய 64 புதிய தந்தையர்களுக்கும் மறக்க முடியாத தருணமாக அமைந்துள்ளது.















