காவன்திஸ்ஸ என அழைக்கப்படும் நீளமான தந்தங்களைக் கொண்ட யானைக்கு துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேகலேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சியம்பலாங்கமுவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த காவன்திஸ்ஸ யானை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தது.
இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரைக் கைது செய்வதற்காக வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவு மற்றும் மேல் மாகாண வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது, நேற்று (18) மாலை, அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹுனுகல்லேவ பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 12 போர் ரக துப்பாக்கி, 24 தோட்டாக்கள் மற்றும் உலர்ந்த இறைச்சி என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 56 வயதுடைய எஹட்டுவெவ, ஹுனுகல்லேவ பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கல்கமுவ வனவிலங்கு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் அந்த அலுவலக அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.













