20 மாதங்களின் பின்னர் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பயணிகளுக்கான நாட்டின் எல்லைகளை திறப்பதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த தடை உத்தரவை பிறப்பித்திருந்தார்.
இந்த தடை பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளை பாதித்துள்ளது.
எனவே இன்று திங்கட்கிழமை முதல் அந்த தடை நீக்கப்பட்டு முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் முயற்சியில், 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்காக அமெரிக்கா எல்லை கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
பின்னர் பிரித்தானியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலும், சீனா, இந்தியா, தென்னாபிரிக்கா, ஈரான் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கும் கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டன.
இந்நிலையில் புதிய விதிகளின்படி, தடுப்பூசி செலுத்திக்கொண்டு பயணிகள், பயணத்திற்கு முன்னரான எதிர்மறையான கொரோனா சோதனையை காட்டினால் தனிமைப்படுத்தல் இன்றி நாட்டுக்குள் வருவதற்கு அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.