18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாகப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு பைஸர் பயோஎன்டெக் நிறுவனம் அமெரிக்க அதிகாரிகளிடம் கோரியுள்ளது.
இது தொடர்பான கோரிக்கை அமெரிக்க மருத்துவ கட்டுப்பாட்டாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.
சுமார் 10 ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மூன்றாவது தடுப்பூசி 95.6 சதவீதம் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொண்டுள்ளமை உறுதி செய்யப்பட்டது.
இந்தப் பின்னணியில் குறித்த நிறுவனம் தமது கோரிக்கையை முன்வைத்துள்ளது.
65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கும் அவசர கால பயன்பாட்டுக்காக மூன்றாவது தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கும் அமெரிக்கா கடந்த செப்டம்பர் அங்கீகாரம் வழங்கியது.
16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது தடுப்பூசியைச் செலுத்துவதற்கான முன்மொழிவும் ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகத்தினால் நிராகரிக்கப்பட்டது.
இதற்கிடையில் பல நாடுகளில் மூன்றாவது தடுப்பூசிகளை ஏற்றும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.