காலநிலை மாற்றம் தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடல் இன்று (புதன்கிழமை) கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பொலிஸார், இராணுவத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் நாட்களில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.