அடுத்த வருடத்தில் மேலும் பல இன்னல்களுக்கு முகம்கொடுக்க பொதுமக்கள் தயாராக இருக்க வேண்டும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் வேலைத்திட்டம் எதுவும் இல்லை என்றும் வெற்று வாக்குறுதிகளை அரசாங்கம் முன்வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ விதானகே இதனை தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், நாடு தொடர்பான தீர்மானத்தை எட்டுவதற்கு மக்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதையே காட்டுகிறது என்றும் குறிப்பிட்டார்.
வரவு செலவு திட்டம் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை எனவும், மேலும் பல இன்னல்களை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் ஹேஷ விதானகே தெரிவித்தார்.