அரசாங்கத்தின் கீழ் நாடு கடந்த இரண்டு வருடங்களாக வங்குரோத்து நிலைக்குச் சென்றுள்ளதையே இந்த வரவு செலவுத்திட்டம் காட்டுவதாக நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் குறித்து நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
பொதுமக்கள் மற்றும் வர்தகர்களிடம் இருந்து வழக்கத்திற்கு மாறான வரிகளை வசூலிப்பதன் மூலம் அரசாங்கம் செயற்படுகின்றது என குற்றம் சாட்டினார்.
தவறான கூற்றுக்கள் மூலம் வரவு செலவுத்திட்டதின் யதார்த்தத்தை மறைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது என்றும் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும் விவசாயிகளின் நெருக்கடி உள்ளிட்ட உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படவில்லை என்றும் நளின் பண்டார கூறினார்.