2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 89 வீதமான நிதி வெறும் 10 அமைச்சுக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை கூறினார்.
தற்போதைய தேவைக்கு ஏற்ப வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் இல்லை என குறிப்பிட்ட அவர், சுகாதார அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
எனவே இந்த ஒதுக்கீடுகள் எவ்வாறு தீர்மானிக்கப்பட்டது என்பது குறித்து விளக்குமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா தொற்று அடுத்த வருடமும் நாட்டில் ஏற்படுத்தும் தாக்கத்தை அரசாங்கம் புறக்கணிக்க முடியாது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.