காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் பொறுப்புக்கூறலைப் புறந்தள்ளும் அரசாங்கம், சர்வதேசத்தை ஏமாற்றும் நோக்கிலேயே காணாமல் ஆக்கப்பட்டோருக்கு 300 மில்லியனை ஒதுக்கியுள்ளதாக முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாங்கள் கேட்பது, சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக பூர்வாங்க விசாரணையொன்றினை சர்வதேச மத்தியஸ்துடன் செய்ய வேண்டும் என்பதே ஆகும் என அனந்தி சசிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, அரசாங்கம் பொறுப்புக்கூறலை இதயசுத்தியுடன் செய்வதற்கு தயாராக வேண்டும் என்பதுடன் மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.