நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. குறித்த கூட்டத்தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
முதல்நாளான இன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் சட்டமூலம் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த சட்டமூலம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டப்பின் மாநிலங்களவைக்கு அனுப்பிவைக்கப்படும்.
அதேநேரத்தில் தனியார் கிரிப்டோகரன்சி குறித்த சட்டமூலமும் தாக்கல் செய்யப்படவுள்ளதுடன், 26 புதிய சட்டமூலங்களை தாக்கல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதேநேரம் பெகாசஸ் விவகாரம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விளையாட்டு பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ஆகியவை குறித்த கேள்விகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.