நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனமும் மின்சார சபையுமே முக்கிய காரணமென நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார சபை ஆகியன எதிர்கொள்ள நேர்ந்துள்ள பாரிய நட்டத்திலிருந்து மீள்வதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களே தேவையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அனுர பிரியதர்ஷன யாப்பா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த இரு துறைகளிலும் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொள்வதற்கு விரிவான பேச்சுவார்த்தை ஒன்றையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அனுர பிரியதர்ஷன யாப்பா வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை இந்த துறைகளுக்கு வெளிநாட்டு முதலீடுகளை மேற்கொள்ளாதபட்சத்தில் மேலும் பல பாதிப்புக்களை எதிர்காலத்தில் எதிர்நோக்க வேண்டிவரும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.