நாட்டில் பாரிய அளவில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படப்போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக குறிப்பிட்டுள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) நடைப்பெற்ற நாடாளுமன்ற அமர்வில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயகவினால் 27/2 இன் கீழ் கேள்வி எழுப்பும் வேளையிலேயே இதனை கூறியுள்ளார்.
வெளிநாட்டு கையிருப்பு நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கிய ஆயிரத்திற்கும் அதிகமான கொள்கலன்கள் விடுவிக்கப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இதனை விடுவிக்க இறக்குமதியாளர்களுக்கு வங்கிகளில் டொலர்களை விடுவிக்க முடியாத நிலையொன்று ஏற்பட்டுள்ளதாகவும் அநுரகுமார திசாநாயக குறிப்பிட்டுள்ளார்.