நாடாளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் விநியோகத் தடையை சீர்செய்ய சுமார் 3 மணித்தியாலங்கள் செல்லும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் கொழும்பின் சில பகுதிகளில் மின் விநியோகத் தடை வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
UPDATE – மின் விநியோகத் தடைக்கான காரணம் வெளியானது!
மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மின்சார விநியோகத்தை மிகக் குறைந்த தாமதத்துடன் மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் பல இடங்களில் மின் விநியோகத் தடை!
நாட்டின் பல இடங்களில் மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தற்போது தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், மின் தடை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.