இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
புதுடெல்லியிலுள்ள ஹைதராபாத் இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது இந்தியப் பிரதமர் மோடி தனது ஆரம்ப உரையில் குறிப்பிட்டுள்ளதாவது, “கொரோனா தொற்றுநோய்களின் போதுகூட இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் எந்த மாற்றமும் இல்லை.
மேலும், இரு தரப்புக்கும் இடையிலான சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மை வலுவடைந்து வருகின்றது. ஆப்கானிஸ்தானின் நிலைமை மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து இரு தரப்பும் தொடர்பில் இருக்கின்றோம்.
அந்தவகையில் இரு நாடுகளும் கடந்த காலங்களில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளன. நாங்கள் ஒத்துழைப்பது மட்டுமல்லாமல், ஒருவருக்கொருவர் உணர்திறனையும் மனதில் வைத்துள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது, “இந்தியாவை ஒரு பெரிய சக்தியாகவும் நட்பு தேசமாகவும் நாங்கள் பார்க்கிறோம். நமது நாடுகளுக்கிடையேயான உறவுகள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.