அரசாங்கம் கப்ரால் வழியை பின்பற்றுகிறதா அல்லது ராஜபக்ஷ வழியை பின்பற்றுகிறதா என ஐக்கிய தேசியக் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.
இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே முன்னாள் பிரதமரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் இந்த கேள்வியை எழுப்பினார்.
குறிப்பாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் திடீர் இந்திய விஜயம் குறித்து கவலைகளை வெளியிட்டு ரணில் விக்ரமசிங்க கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் பசில் ராஜபக்ஷ கலந்துகொள்ளாத நிலையில் அரசாங்கம் கப்ரால் வழியை பின்பற்றுகிறதா அல்லது ராஜபக்ஷ வழியை பின்பற்றுகிறதா என கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, அரசாங்கம் ஜனாதிபதியின் சுபீட்சத்திற்கான நோக்கு எனும் கொள்கையின் பிரகாரம் செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.