ஒமிக்ரோன் தொற்று கடுமையான நோயை ஏற்படுத்தாது என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
முதலில் தென்ஆபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் தொற்று பிற நாடுகளுக்கு வேகமாக பரவிவரும் நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முந்தைய கொரோனா வகைகளை விட ஒமிக்ரோன் தொற்று கடுமையான நோயை ஏற்படுத்துகிறது என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என மைக்கேல் ரியான் கூறியுள்ளார்.
நம்மிடம் மிகவும் பயனுள்ள தடுப்பூசிகள் உள்ளன என்றும் அவை தற்போதுள்ள அனைத்து வகைகளுக்கும் எதிராக செயற்பட்டு நோயின் தீவிரத்தை கட்டுபடுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.