குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கு இருந்த கட்டுப்பாட்டை நீக்கியுள்ள சீனா, 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக சலுகைகளை அறிவித்துள்ளன.
3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மானியங்கள், வரிக்குறைப்பு உள்ளிட்ட சலுகைகைளை மாகாண அரசாங்கங்கள் அறிவித்துள்ளன.
மேலும் பீஜிங், சிச்சுவான் மற்றும் ஜியாங்சி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட மாகாணங்கள் மகப்பேறு விடுப்பு போன்றவற்றை அறிவித்துள்ளன.
மேலும் திருமண விடுமுறையை நீட்டித்தல் மற்றும் தந்தைவழி விடுப்பை அதிகரிப்பது போன்ற ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.