ஓமிக்ரோனின் பரவலைக் கட்டுப்படுத்த பிரதமர் தனது கொவிட் ‘பிளான் பி’க்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து, இங்கிலாந்தில் உள்ள மக்கள் அன்றாட வாழ்வில் கூடுதல் கட்டுப்பாடுகளுக்குத் தயாராகி வருகின்றனர்.
நாளை (வெள்ளிக்கிழமை) முதல் புதிய விதிகள் நடைமுறைக்கு வருகின்றன. இதில் பெரும்பாலான பொது இடங்களில் முகக்கவசங்கள் அணிவது, சில இடங்களுக்கான கொவிட் பாஸ்கள் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்யும் வழிகாட்டுதல் ஆகியவை அடங்கும்.
ஒவ்வொரு 2.5 முதல் மூன்று நாட்களுக்கும் கொவிட் தொற்றுகள் இரட்டிப்பாகும் என்று ஆரம்ப பகுப்பாய்வு பரிந்துரைக்கிறது.
பிரித்தானியாவில் இதுவரை 568 உறுதிப்படுத்தப்பட்ட ஓமிக்ரோன் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.