நாட்டில் எதிர்காலத்தில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் மருத்துவர் திலீப் லியனகே, 30 வயதுக்கு மேற்பட்ட இலங்கையர்களுக்கு தற்போது பூஸ்டர் டோஸ் வழங்கப்படுகின்றது என தெரிவித்தார்.
மேலும் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான அதிகரிக்கப்பட்ட மருந்தளவை இரண்டு வாரங்களுக்குள் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், எதிர்காலத்தில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.