இந்துக்களின் முக்கிய உற்சவமான திருவெம்பாவையின் ஆரூத்திரா தீர்த்தோற்சவம் இன்று அதிகாலை நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றன.
அதற்கமைய கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆரூத்திரா தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த பத்து தினங்களாக திருவெம்பாவை உற்சவம் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்று வந்தது.
நேற்று நள்ளிரவு ஆலயத்தில் விசேட பூஜைகள் ஆரூத்திரா அபிசேகம் நடைபெற்று இன்று அதிகாலை தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதி சௌந்தரராஜ குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த உற்சவத்தில், மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தக்கேணியில் தீர்த்த உற்சவம் நிறைவு பெற்றதும் ஆலயத்தில் திருப்பொன்னூஞ்சல் நிகழ்வு நடைபெற்றது.
கொரோனா அச்சுறுத்தல் நீங்கவும் நாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்படவும் இதன்போது விசேட பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய உற்சவத்தில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.