மசகு எண்ணெய் இறக்குமதிக்கு தேவையான டொலரை திரட்டிக் கொள்வதில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் பாரிய நெருக்கடியினை தற்போது எதிர்க்கொண்டுள்ளது.
எதிர்வரும் மாதம் முதல் நாட்டில் நிச்சயம் எரிபொருள் விநியோகத்தில் பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எதிர்வுகூறியுள்ளது.
எரிபொருள் தொடர்பாக தொடர்ச்சியாக காணப்படும் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொள்ள அரசாங்கம் உரிய திட்டத்தை வகுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனவரி மாத்திற்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு எரிசக்தி அமைச்சரிடம் கோரிய நிதி இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக எதிர்வரும் மாதம் நாட்டில் நிச்சயம் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.