உலகின் தொலைதூரப் பகுதிகளில் ஒன்றான அண்டார்டிகாவில் உள்ள ஒரு பெல்ஜிய அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த டிசம்பர் 14 முதல், இளவரசி எலிசபெத் போலார் நிலையத்தில் பணியாற்றும் 25 தொழிலாளர்களில் குறைந்தது 16 பேர் பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இருப்பினும் நோயாளிகள் அடையாளம் காணப்படும் எண்ணிக்கையில் லேசானதாக அதிகரிப்பே இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
வைரஸ் உறுதியான சில ஊழியர்களை தனிமைப்படுத்துவது சிரமமாக இருந்தாலும், இதனால் வேலையை எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என சர்வதேச போலார் அறக்கட்டளையின் திட்ட மேலாளரான ஜோசப் சீக் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த நிலையத்தில் வசிப்பவர்கள் அனைவருக்கும் ஜனவரி 12 அன்று திட்டமிடப்பட்ட விமானத்தில் செல்ல வாய்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும், அவர்கள் அனைவரும் தங்கி தங்கள் வேலையைத் தொடர விருப்பம் தெரிவித்தனர் என அவர் கூறினார்.