இராணுவ மோதல்கள் தீர்வாகாது என குறிப்பிட்டுள்ள தாய்வான் ஜனாதிபதி, சிவப்புக் கோட்டைத் தாண்டினால் அது ஆழமான பேரழிவிற்கு வழிவகுக்கும் என சீனாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தாய்வானை ஜனநாயக ரீதியில் ஆளுவதாக சீனா உரிமை கோரிவரும் நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இராணுவ மற்றும் இராஜதந்திர அழுத்தங்களை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தாய்வான் மக்களுக்குப் புத்தாண்டை முன்னிட்டு விசேட உரையாற்றிய ஜனாதிபதி சாய் இங்-வென், பெய்ஜிங் அதிகாரிகளுக்கு நிலைமையை தவறாக மதிப்பிட கூடாது என குறிப்பிட்டார்.
மேலும் தங்களது எல்லைப் பகுதியில் சீன இராணுவ விமானங்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இராணுவ வழிமுறைகளைப் பயன்படுத்துவதில் தமக்கு விருப்பம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய மாதங்களில் தாய்வானின் வான் பரப்பில் சீன யுத்த விமானங்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இருப்பினும் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியப்போவதில்லை என தாய்வான் தெரிவித்துள்ளது.