மணிப்பூர் மற்றும் திரிபூரா மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த விடயம் தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “மணிப்பூரில் 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான 22 வளர்ச்சி திட்டங்கள், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செயல்படுத்தப்படுகின்றன.
அதேபோன்று தலைநகர் இம்பாலில் 1850 கோடி ரூபாயில் 13 வளர்ச்சி திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
அதனைத் தொடர்ந்து அங்கு புதுப்பிக்கப்பட்ட கோவிந்தா ஜி கோயிலையும் பிரதமர் திறந்து வைக்கவுள்ளார்.
இதேவேளை திரிபூரா- அகர்தலாவில் மகராஜா பீர் பிக்ரம் விமான நிலையத்தில் 450 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டடத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்.
குறித்த நவீன வசதிகள் கொண்ட கட்டடம் 30,000 சதுர மீட்டர் பரப்பளவை கொண்டு காணப்படுகின்றது” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.