ஜனாதிபதியினால் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மீண்டும் சட்டத்தரணி பணிக்கு திரும்பவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டமையை ஊடகங்கள் மூலமே அறியக் கிடைத்தது என்றும் எவ்வித முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் விவசாயமும் அரசாங்கத்தின் கொள்கை திட்டமும் தோல்வியடைந்துவிட்டன என்று பதிலளித்ததாக சுசில் பிரேமஜயந்த கூறினார்.
திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம் இருந்தாலும் முடிவுகளை எடுப்பவர்கள் கல்வியை மதிப்பதில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும் தனது பதவி நீக்கம் நாட்டின் எதிர்கால அரசியல் களத்தில் திருப்புமுனையாக அமையும் என்றும் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார்.