நாட்டின் எண்ணெய் தாங்கிகளின் கட்டுப்பாட்டை அரசாங்கம் இழந்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச இதனை கூறினார்.
இந்தியாவுடன் இணைந்து எடுக்கப்படும் சில அரசாங்க தீர்மானங்கள் எதிர்காலத்தில் பாதகமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
இன்றைய நிலவரப்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் குறைந்த எண்ணிக்கையிலான தாங்கிகள் இருப்பதாக தெரிவித்தார்.
அதே நேரத்தில் IOC க்கு மற்றொரு பிடி இருப்பதாகவும், மேலும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் LIOC க்கு இடையில் ஒரு கூடுதல் நிறுவனம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
திட்டமிட்ட வகையில், வளர்ச்சியை அறிந்தோ அல்லது தெரியாமலோ, இலங்கை எண்ணெய் தாங்கிகளின் கட்டுப்பாட்டை இழந்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அமைச்சரவையிலும், பாராளுமன்றத்திலும் ஆட்சேபனைகள் முன்வைக்கப்படும் அதேவேளையில், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் இணைந்து சுதந்திரக் கட்சியினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விமர்சனங்களால் அதிருப்தியடைந்த அரசாங்கம், உறுப்பினர்களை பதவி விலகுமாறு கோருவதாக பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்தார்.