கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததை அடுத்து, பசிபிக் நாடான டோங்காவில் இன்று (சனிக்கிழமை) சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட கணொளியில் கடலோரப் பகுதிகளில் பெரிய அலைகள் அப்பகுதிகளில் உள்ள குடியிருப்புக்களை மூழ்கடிப்பதைக் காட்டுகிறது.
டோங்காவின் அனைத்து பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை அமுலில் உள்ளதாக டோங்கா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நுகுவாலோஃபா முழுவதும் சைரன்கள் ஒலிப்பதாக செய்திகள் உள்ளன, மேலும் பொலிஸார் மக்களை உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
சனிக்கிழமையன்று ஏற்பட்ட வெடிப்பு, ஹங்கா டோங்கா ஹங்கா ஹா’பாய் எரிமலையிலிருந்து எழும்; சமீபத்திய வெடிப்பு ஆகும்.
நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை எரிமலை வெடிக்கத் தொடங்கிய பின்னர், அதன் அருகே பாரிய வெடிப்புகள், இடி மற்றும் மின்னலை விஞ்ஞானிகள் அவதானித்ததாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
செயற்கைக்கோள் படங்கள் 5 கிமீ (3 மைல்) அகலமான சாம்பல், நீராவி மற்றும் வாயு காற்றில் சுமார் 20 கிமீ (12 மைல்) வரை உயர்ந்து வருவதைக் காட்டியது.
நியூஸிலாந்தில் 2,300 கிமீ (1,400 மைல்கள்) தொலைவில், வெடிப்பிலிருந்து புயல் எழுச்சி ஏற்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.
நியூஸிலாந்தின் சில பகுதிகள் ‘ஒரு பெரிய எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து கரையில் வலுவான மற்றும் அசாதாரண நீரோட்டங்கள் மற்றும் கணிக்க முடியாத எழுச்சிகளை’ எதிர்பார்க்கலாம் என்று தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் கூறியது.