பொரளை அனைத்து புனித தேவாலயத்தில் கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டு தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையவில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.
கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கமால் குணரத்ன, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு கால அவகாசம் தேவைப்படும் என தெரிவித்தார்.
தேவாலயங்கள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விசாரணைகள் தொடர்பான தகவல்கள் பொதுமக்களுக்கு வெளியிடப்படாத போதிலும், விசாரணை திருப்திகரமான வகையில் முன்னெடுக்கப்படுவதாக கமால் குணரத்ன தெரிவித்தார்.
இதேவேளை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்த முழுமையான விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் அதில் அதிருப்தி இருப்பின் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் விமர்சிக்கலாம் என்று பாதுகாப்பு செயலாளர் கூறினார்.