திபெத் தன்னாட்சிப் பிராந்தியத்தின் மக்கள் தொகையை மாற்றியமைக்கும் நோக்கத்தில் கொள்கைகளை சீன கம்னியூஸ் கட்சி உருவாக்குகிறது என்று திபெத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எட்டு அல்லது ஒன்பது வயதுக்குட்பட்ட சிலர் போதனை வசதிகளுக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் காணப்படுகின்றன. திபெத்தியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான சீன மக்கள் விடுதலை இராணுவம் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு உள்ளுர் மக்களிடையே எதிர்ப்புக்கள் ஏற்படுமாயின் அதனை முறியடிப்பதை நோக்கமாகக் கொண்டதே அதற்கு காரணமாகும் என கூறப்படுகின்றது.
கடந்த டிசம்பரில், திபெத்தில் உள்ள சீன அதிகாரிகள் திபெத்திய குழந்தைகளைப் பெற்றோரிடமிருந்து பிரிக்கவும், அவர்களின் சொந்த மொழி மற்றும் கலாசாரத்தின் வெளிப்பாடுகளைக் குறைக்கவும் வதிவிடப் பாடசாலைகளின் பரந்த வலையமைப்பை அமைத்துள்ளதாக திபெத் நிறுவமொன்று ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
சீன கம்யூனிஸ் கட்சி அரை மில்லியனுக்கும் அதிகமான திபெத்தியர்களை கட்டாய உழைப்பு திட்டங்களுக்கு சீனாவில் உள்ள இரகசிய இடங்களுக்குள் பலவந்தமாக அனுப்பி உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
சீனாவின் தவறான தகவல் பிரசாரம் மற்றும் வரலாற்று உண்மையினை அரச இயந்திரத்தினைப் பயன்படுத்தி திரித்தல் ஆகியவை ஏற்கனவே திபெத்திய நாகரிகத்தை அழிவின் விளிம்பிற்கு கொண்டு வந்துள்ளன.
ஆகவே, திபெத்திய வரலாறு, கலை மற்றும் கலாசாரத்தின் ஒழிக்கும் செயற்பாடுகள் சிறப்பாக நடந்து வருகிறன. உலக சமூகம் திபெத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்து கேள்விகளை எழுப்பி, திபெத்திய நோக்கத்திற்காக ஒன்றுபட வேண்டும் என்றும் அந்த அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.
குறிப்பாக வெஸ்டர்ன் தியேட்டர் கமாண்டின் கீழ், உயரமான இடங்களில் ஹான் இன வீரர்களை பணியமர்த்துவதால் ஏற்படும் தீமைகளை சமநிலைப்படுத்துவதற்கா சீன அதிகாரிகள் அதிக திபெத்தியர்களை பணியில் அமர்த்த முயற்சிக்கின்றார்கள்.
அதிக உயரத்தில் இருக்கும் முதல் பதிலளிப்பு துருப்புக்கள் திபெத்தியர்களாக இருக்க வேண்டும் என்று சீனர்கள் நம்புகிறார்கள், அவர்கள் குறைந்த ஒக்சிசன் உள்ள பகுதிகளில் திறம்பட செயல்பட முடியும் என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டும் உள்ளது.
திபெத், பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட சீன கம்யூனிஸ் கட்சி அரசாங்கத்தால் ஆளப்படுகிறது. உள்நாட்டு விடயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் சீனக் கட்சி அதிகாரிகளின் கைகளில் குவிந்துள்ளது.
1950இல் மக்கள் விடுதலை இராணுவம் வடக்குத் திபெத்தில் நுழைந்தது. அதுவரையில் திபெத் ஒரு இறையாண்மை கொண்ட நாடாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.