நாட்டில் இன்றைய தினமும் (ஞாயிற்றுக்கிழமை) மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
கனியவள கூட்டுதாபனத்திடம் இருந்து நேற்று கிடைக்கப்பெற்ற 3 ஆயிரம் மெற்றிக் டன் டீசல் தொடர்ந்து போதுமானதாக உள்ளமையினால் மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய அவசியம் இல்லையென அந்த சபையின் மேலதிக பொது முகாமையாளரும் பேச்சாளருமான எண்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.
அத்துடன் அதிகளவான மின்சார தேவை ஏற்படாதவிடத்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமைவரை குறித்த எரிபொருள் போதுமானதான இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எதிர்வரும் நாட்களில் மின்சார சபைக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.