இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு இடையில் இணையவளியில் சந்திப்பொன்று இடமபெற்றுள்ளது.
இதன்போது மனிதாபிமான நடவடிக்கையாக இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விரைவில் விடுவிக்க இந்திய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
400 மில்லியன் அமெரிக்க டொலர் பரஸ்பர நாணய பரிமாற்றம் மற்றும் ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியத்தின் ஊடக 515.2 மில்லியன் அமெரிக்க டொலர் குறித்து இதன்போது பேசப்பட்டுள்ளது.
மேலும் அத்தியாவசியப் பொருட்களுக்கான 1 பில்லியன் கடன் மற்றும் எரிபொருள் வாங்குவதற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதிஉதவி குறித்தும் இதன்போது பேசப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த சந்திப்பின்போது இலங்கையின் உறுதியான மற்றும் நம்பகமான பங்காளியாக இந்தியா இருக்கும் என்பதை ஜெய்சங்கர் மீண்டும் வலியுறுத்தினார்.