கம்பன் கலைக்கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் கம்பவாரிதி ஜெயராஜ் தலைமையில் இடம்பெற்றது.
அகில இலங்கை கம்பன் கழகத்தின் சிந்தனைக்கு அமைவாக இளைஞர்களை வளப்படுத்தும் கம்பன் கலைக்கூடத்திற்கான ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோகணேசன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சாணக்கியன், யாழ். மாநகர சபை மேஜர் மணிவண்ணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவாஜிலிங்கம், வடமாகாண அவை தலைவர் உள்ளிட்ட பலர் வருகைத்தந்தனர்.
வருகை தந்திருந்த விருந்தினர்கள் விழா மண்டபம் வரை அழைத்து வரப்பட்டு வாழ்த்துரைகள் இடம்பெற்றன.
அதனைத்தொடர்ந்து குறித்த கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






