இலங்கையினால் செலுத்தப்பட வேண்டியிருந்த 500 மில்லியன் டொலர் கடன் தவணை இன்று செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு குறைவடைந்ததன் காரணமாக அண்மைய வாரங்களில் இந்த விடயம் பெரிதும் விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில் இதனை டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஆளுநர், சர்வதேச நாணய நிதியம், மூடிஸ் முதலீட்டாளர் சேவை போன்றவரிக்கும் டாக் செய்துள்ளார்.
கடனை திருப்பி செலுத்தியதனால் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் இறக்குமதிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.