நல்லாட்சி அரசாங்கம் இருந்திருந்தால் கொரோனா தொற்றினால் மக்கள் இவ்வளவு துன்பங்களை அனுபவித்திருக்க மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
நாட்டில் பதிவாகியுள்ள 15 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட கொரோனா இறப்புகளுக்கு அரசாங்கமே முழு பொறுப்பு என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாட்டில் கொரோனாவை இல்லாதொழிக்கும் முயற்சி முற்றிலும் தோல்வியடைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, பாடசாலை மாணவர்கள் மத்தியில் தொற்றுநோய் பரவும் அபாயம் தற்போது காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.