மட்டக்களப்பு கொழும்பு வீதி ஊறணி சந்தியில் மோட்டர்சைக்கிள் ஒன்றும் கோழிகளை ஏற்றிச் சென்ற கன்ரர் ரக வாகனம் ஒன்றும் மோதிய விபத்தில் மோட்டர்சைக்கிளை செலுத்திச் சென்ற பெண் ஒருவர் படுகாயமடைந்ததுடன் வாகனம் தடம்புரண்டுள்ள சம்பவம் இன்று (புதன்கிழமை) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது இதில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சாரதியை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பகுதியில் இருந்து காத்தான்குடி பிரதேசத்தை நோக்கி கோழிகளை ஏற்றிக் கொண்டு பிரயாணித்த கன்ரர் ரக மட்டக்களப்பில் இருந்து சம்பவதினமான இன்று அதிகாலை 5 மணியளவில் ஊறணிக்கு மோட்டர்சைக்கிளை செலுத்தி சென்ற பெண் ஊறணி சந்தியில் ஊறணிக்கு செல் மட்டக்களப்பு ஊறணி சந்தியில் எதிரே வந்த கன்ரர் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் பெண், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அவரசசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை சுமார் 50 மீற்றர் தூரம்வரை மோட்டர் சைக்கிளை இழுத்துச் சென்ற நிலையில் கன்ரர் வாகனம் வீதியைவிட்டு விலகி தடம்புரண்டுள்ளதுடன் கன்ரர்ரக வாகன சாரதியை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.